Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

Webdunia 15 hrs ago
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.
ஒருபக்கம் சென்னையிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியிருக்கிறது. நேற்று முன் தினம் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள். பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் பேசும் போது நீட் தேர்வுக்கு எதிராக பேசாமல் தவெக அரசுக்கு எதிராக பேசினார்கள்.
அமீர் பேசியபோது 'இங்கே ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு பக்கம் ஜனநாயகன் படத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விஜய் முகத்தை மூடி கலந்து கொண்டார்.. இப்போது அவர் முதலமைச்சராக மாறிய பின் அவர் வரவில்லை' என்று கூறியிருந்தார்..

ரஞ்சித் பேசிய போது '8 தலித் அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் தலித் பிரச்சனையை பற்றி பேசவில்லை.. சேலத்தில் அம்பேத்கர் சிலை திறக்கபடவில்லை. முதல்வர் நினைத்தால் அதை திறக்க முடியாதா?' என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பலரும் அமீர் மற்றும் ரஞ்சித்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். 'அமீர் போன்றவர்கள் திமுக ஆட்சி இல்லை என்றால்தான் போராட்டம் செய்ய வருவார்கள்.. இதே திமுக ஆட்சியில் நீட் தொடர்பான பிரச்சனைகள் இருந்தது.. அப்போது எல்லாம் வெற்றிமாறனும், ரஞ்சித்தும், அமீரும் எங்கே போனார்கள்?.. தவெக ஆட்சிக்கு வந்ததையும், திமுக தோற்றுப்போனதையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அமீர் இல்லை என்றால் டெல்லியில் போராட்டம் நடந்திருக்காமல் போயிருக்குமா?.. எதற்காக இவ்வளவு பில்டப்?.. வெற்றிமாறனின் விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிட்டது.. அதனால்தான் அப்போது வெற்றிமாறன் அமைதியாக இருந்தார்.. இவர்கள் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்' என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil