உலகெங்கும் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்பைடர் மேன் படங்களை விரும்பி பார்க்கிறார்கள்..
அந்த வகையில் கடந்த ஜூலை 30-ம் தேதி டாம் ஹாலந்த் நடிப்பில் உருவான Spider Man: New Brand Day திரைப்படம் ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு உலகமெங்கும் வெளியானது.
இந்நிலையில் இந்தப் படம் டைட்டானிக் பட வசூலை தாண்டி உலக அளவில் அதிக வசூல் செய்த நான்காவது படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது.. டைட்டானிக் படம் உலகமெங்கும் 2.26 மில்லியன் டால்ர் வசூல் செய்திருந்தது. ஆனால், ஸ்பைடர் மேன் நியூ பிராண்ட் டே 2.3 மில்லியன் டாலர் ((இந்திய மதிப்பில் ரூ.22 ஆயிரம் கோடி) வசூலித்துள்ளது. அதிக வசூல் குவித்த படங்களில் Avatar முதலிடத்திலும், Avengers End Game 2வது இடத்திலும் இருக்கிறது.

