தமிழக அரசியலின் 2026 தேர்தல் களம், பலரும் ஊகித்ததைப் போலவே ஒரு "தொங்கு சட்டசபை"யை நோக்கி நகர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் எனும் மேஜிக் நம்பரை எட்ட முடியாத சூழல் நிலவுகிறது. 97 இடங்களுடன் தமிழக வெற்றி கழகம் முதலிடத்திலும், 73 இடங்களுடன் அதிமுக இரண்டாம் இடத்திலும், 63 இடங்களுடன் ஆளுங்கட்சியான திமுக மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க இன்னும் 21 இடங்கள் தேவைப்படுகின்றன. இதனால், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து அதிருப்தியில் உள்ள கட்சிகளோ அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளோ விஜய்யின் "மாற்றத்திற்கான அரசியலை" ஏற்று தவெக-விற்குத் தோள் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Edited by Siva

