தமிழக முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார்.
அதில் பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்தார். இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சில மாதங்களில் அங்கு இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்காக முதல்வர் விஜய் இன்று மதியம் திருச்சி சென்றார். மாலை 4 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் மக்கள் முன்பு அவர் உரையாற்றினார்..
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி.. நான் சொன்னதெல்லாம் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள் அரை மணி நேரத்திலேயே ஆரம்பித்து விட்டார்கள்.. மக்களை தற்குறி தற்குறி என்று சொன்னீர்கள்.. அவர்கள்தான் இப்போது உங்களை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறார்கள். இனி உங்கள் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறிதான்' என்று பேசினார்.
மேலும் அதிமுகவை மறைமுகமாக அது ஒன்றுமே இல்லாத கட்சி என்று பேசினார் விஜய். நீங்களும் (திமுக) தீர்ந்து போன கட்சியும் சேர்ந்து தவெந்கவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க பார்த்திரீகள். இப்படியெல்லாம் நடக்குமா என தோன்றியது' என பேசினார்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 'நீங்க கோட் போடுங்க.. போயஸ்கார்டன்ல வீடு வாங்குங்க.. யார் கவலைப்பட்டா?.. உலகமே உங்களைதான் சுத்திதான் இயங்குற மாதிரி சும்மா நசநசன்னு புலம்பிட்டு இருக்காதீங்க' பதிலடி கொடுத்தார்.

