Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

Webdunia 2 hrs ago
த்திய ஆளும் பாஜக ஆட்சியில் கடந்த பல வருடங்களாகவே நிதியமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். ஜி.எஸ்.டி தொடர்பாக இவர் கொடுத்த பேட்டிகள் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
ஹோட்டலில் போய் சாப்பிட்டால்தானே ஜி.எஸ்.டி.. ஹோட்டலில் போய் சாப்பிடாதீர்கள்.. வீட்டிலேயே சாப்பிடுங்கள்' என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியவர் இவர்..

திமுகவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் நிர்மலா சீதாராமன். தற்போது தவெக ஆட்சி செயல்பட்டு வரும் நிலையில் தவெகவுக்கு ஆதரவாக நிர்மலா கருத்து தெரிவித்து வருகிறார். சட்டசபையில் திமுகவை விஜய் கடுமையாக விமர்சனம் செய்கிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது 'சட்டசபையில் அரசியல் செய்யாமல் வேறு எங்கு அரசியல் செய்ய முடியும்?' என கேள்வி எழுப்பியிருந்தார் நிர்மலா சீதாராமன்.

இந்நிலையில்தான் சென்னையில் ஒரு தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அவர் பேசுவதற்கு முன் அவரைப் பற்றிய வரவேற்பு விளக்க வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது/ அதை பார்த்து நிர்மலா சீதாராமன் 'வேண்டாம் நிறுத்துங்கள்' என்று கூறினார்.. அதன்பின் எழுந்து நின்று 'நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்' என்று கூறினார். எனவே, அந்த வீடியோ உடனடியாக நிறுத்தப்பட்டது..

நிர்மலா சீதாராமன் அந்த வீடியோவை ஏன் நிறுத்த சொன்னார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil