Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெறும் 5 லட்சத்தில் மாருதியின் புதிய எஸ்யூவி கார் அறிமுகம்: டாடா பஞ்ச் காருக்கு போட்டியா?

வெறும் 5 லட்சத்தில் மாருதியின் புதிய எஸ்யூவி கார் அறிமுகம்: டாடா பஞ்ச் காருக்கு போட்டியா?

Webdunia 4 days ago

ந்திய கார் சந்தையில் பட்ஜெட் விலை கார்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற 'டாடா பஞ்ச்' மாடல் காருக்கு போட்டியாக, மாருதி சுசுகி நிறுவனம் வெறும் 5 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் ஒரு புதிய அசத்தலான எஸ்யூவி காரை அறிமுகம் செய்யவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கார் பிரியர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண ஹேட்ச்பேக் கார்களை போல இல்லாமல், இந்த புதிய கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் தரையில் இருந்து அதிக உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரிய டயர்கள் காரின் கம்பீரமான தோற்றத்திற்கு வழிவகுப்பதுடன், பயணிகளின் பாதுகாப்பையும் பலமடங்கு வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் 'பஞ்ச்' என்ற மைக்ரோ எஸ்யூவி காரை அறிமுகம் செய்து, நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் போட்டியாகவே தற்பொழுது மாருதி நிறுவனம் இந்த அதிரடி விலையில் புதிய காரைக் களம் இறக்கியுள்ளது. பட்ஜெட் விலையில் எஸ்யூவி காரை எதிர்பார்க்கும் நடுத்தர மக்களுக்கு இந்த கார் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கார் சந்தைக்கு வந்த பிறகு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil