Dailyhunt
விஜய் பதவியேற்பு விழாவுக்கு வரும் ராகுல் காந்தி? பிரியங்கா காந்தியும் வருவாரா?

விஜய் பதவியேற்பு விழாவுக்கு வரும் ராகுல் காந்தி? பிரியங்கா காந்தியும் வருவாரா?

Webdunia 1 week ago

மிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், அரசியல் களம் மிக விறுவிறுப்பாகியுள்ளது.

இன்று பனையூர் அலுவலகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யை தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை அவர்கள் விஜய்யிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து, தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, விஜய் நாளை தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதவியேற்பு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் காந்திக்கு த.வெ.க தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரியங்கா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் தலைமையிடமிருந்து இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil