Dailyhunt
விஜய் காரின் மீது நீச்சலடிக்கும் ஆர்வக்கோளாறு ரசிகர்கள்!.. ஷாக்கிங் வீடியோ!...

விஜய் காரின் மீது நீச்சலடிக்கும் ஆர்வக்கோளாறு ரசிகர்கள்!.. ஷாக்கிங் வீடியோ!...

Webdunia 3 weeks ago
டிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியாவது விஜயை அருகில் பார்க்க வேண்டும் எனவும், அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார்கள்.
தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அவர் அடிக்கடி வெளியே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டத்திற்கும், பிரச்சாரத்திற்கும் அவர் வெளியே வரும்போது அவரை எப்படியாவது அருகில் பார்க்க அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதுவும் சாலையில் விஜயின் கார் சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்தும், அவரின் வாகனத்திற்கு பக்கவாட்டிலும் வேகமாக சென்றும் விஜயை அருகில் பார்க்கவும், அவருக்கு கை காட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். தஞ்சாவூரில் அப்படி சென்ற ஒரு கல்லூரி மாணவர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி மரணமடைந்தார். ஆனாலும், விஜய் ரசிகர்கள் திருந்தவில்லை.

இன்னமும் அதை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்கிறார். எனவே, சென்னையிலிருந்து சாலை வழியாக அவர் காரில் புதுச்சேரி சென்றார். அப்படி விஜய் சென்றபோது புதுச்சேரி அருகே விஜயின் காரின் மீது சில ரசிகர்கள் தாவி நீச்சலடித்துக்கொண்டே விஜய்க்கு கை காட்டி சந்தோஷப்பட்டார்கள்.அதன்பின் பவுன்சர்கள் அவர்களை அலேக்காக தூக்கி கீழே இறக்கிவிட்டனர்.

இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து 'இவர்கள் திருந்தபோவதில்லை. விஜய் வெளியே வராமல் இருப்பது நல்லது.. விட்டால் விஜயை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்கள் போல' என நக்கலடித்து வருகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil