நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறது.
35 சதவீத வாக்குகளை பெற்றதோடு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரம் ஆட்சி அமைக்க விஜய்க்கு இன்னும் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்கிறார்கள்..
அந்த ஆதரவு யார் கொடுக்கப் போகிறார் என்பதுதான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கண்டிப்பாக திமுக கொடுக்காது. அதிமுக ஆதரவு அளிக்காது என நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் ஓ.எஸ் மணியன் பேட்டி கொடுத்தார்..
எனவே அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் தவெக இறங்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முன் வந்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. அதே நேரம் அதிமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடன் ஆதரவை பெறக் கூடாது அதாவது மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து மட்டுமே ஆதரவை பெறவேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அநேகமாக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை இன்று காங்கிரஸ் தலைமை விஜயிடம் கொடுக்கும் என தெரிகிறது. ஒருபக்கம் விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது..

ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில் விஜயின் பதவி ஏற்பளவில் ராகுல் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை. அதேபோல் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களை கொடுத்தாலும், ஆட்சி அமைக்க மேலும் 7 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அநேகமாக விசிக, கம்யூனிஸ்ட், தேமுதிக போன்ற கட்சிகளின் ஆதரவை தவெக ரும் என எதிர்பார்க்கப்படுகிறது...