Dailyhunt
விஜய்க்கு ஒரு மணி நேரம் மட்டுந்தான் பர்மிஷன் கொடுப்பீங்களா?!.. ஆதவ் அர்ஜுனா கோபம்!..

விஜய்க்கு ஒரு மணி நேரம் மட்டுந்தான் பர்மிஷன் கொடுப்பீங்களா?!.. ஆதவ் அர்ஜுனா கோபம்!..

Webdunia 2 weeks ago
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.
ஒருபக்கம் சில நாட்களுக்கு முன்புதான் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். ஒருபக்கம் அவரின் கட்சி வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்..

அதேநேரம் விஜய் பிரச்சாரத்தை துவங்கிய முதல் நாளே அவருக்கு சிக்கல் எழுந்தது. அதாவது தான் போட்டியிடும் பெரம்பலூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூர் சென்ற போது அங்கே பல தடங்கல்கள் ஏற்பட்டது. இதையடுத்து பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். ஒருபக்கம் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்..

அதேபோல் இன்று சென்னையில் நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்ய விஜய் தரப்பு அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசார் பல கெடுபிடிகளை விதித்தால் விஜய் இன்றும் பிரச்சாரத்தை ரத்து செய்தார்..

இந்நிலையில், செய்திகளிடம் பேசிய தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ' ஒரு மணி நேரம்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என காவல்துறை சொல்கிறது. ஸ்டாலின், பழனிச்சாமி என எல்லோரும் சென்னையில் பிரச்சாரம் செய்கிறார்கள்.. அவர்களிடம் இப்படி ஏதாவது கண்டிஷன் போடுகிறார்களா?.. விஜய்க்கு மட்டும் ஏன் ஒரு மணி நேரம் மட்டும் கொடுக்கிறார்கள்? இது ஒரு அரசியல் கட்சி தலைவரை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.. வில்லிவாக்கத்தில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் அதுவும் ஒரு மணி நேரம்தான் பரப்புரை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.. இது சரியல்ல.. இதனால்தான் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்தார்..

4 இடங்கலில் அனுமதி கேட்டால் போலீஸ் ஒரு தொகுதியில் மட்டுமே அனுமதி கொடுக்கிறது.. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஒரு தொகுதியில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என காவல்துறை சொல்ல முடியாது.. மக்களை சந்திப்பது எங்களின் உரிமை.. மக்களுக்கு காவல்துறைதான் பாதுகாப்பு தர வேண்டும்.. காவல்துறையை திமுக சொல்வதைத்தான் கேட்கிறது.. முதலில் 2 முதல் 6 மணி வரை அனுமதி கொடுத்து விட்டு பிறகு அதை ஒரு மணி நேரமாக மாற்றி விட்டனர்.. அதற்கு என்ன காரணம்?' என அவர் கேள்வி எழுப்பினார்.மேலும் இந்த தொகுதியில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என சொல்லும் அதிகாரம் காவல்துறைக்கு கிடையாது என்றும் அவர் பேசியிருக்கிறார்..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil