தமிழக அரசியல் திமுக - அதிமுக என்று மட்டுமே செயல்பட்டுவந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
துவக்கம் முதலே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என பேச துவங்கினார் விஜய். இது மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான், தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கத்தில் தபால் ஓட்டுகளில் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் முதலிடத்திலும், இரண்டாம் இடத்திற்கு அதிமுகவும், 3ம் இடத்திற்கு திமுகவும் சென்றது.

தற்போது 234 தொகுதிகளிலும் வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இப்போதைய நிலவரப்படி 106 தொகுதிகளில் தவெகவும், 66 தொகுதிகளில் அதிமுகவும், 62 தொகுதிகளில் திமுகவும் முன்னிலை வகித்து வருகிறது.
ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி தேவை என்கிற நிலையில் விஜயின் தவெக 106 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க இன்னும் 12 தொகுதிகளை தவெக பெறவேண்டு. அது நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படி ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்காமல் போனால் அதிமுக உதவியோடு தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது.
அப்படி நடந்தால் கண்டிப்பாக பாஜக உள்ளே வரும் என்கிறார்கள். ஏனெனில், விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் லிஸ்டில் பாஜக எம்.எ.ஏக்களும் இருப்பார்கள். தற்போது 4 இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. எனவே, கண்டிப்பாக 2 அமைச்சர்கள், துணை முதல்வர் போன்ற பதவிகளை விஜயிடம் கேட்பார்கள். அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் விஜயும் ஆட்சி அமைக்க முடியாது.
என்ன நடக்கப்போகிறது?. விஜய் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!..