Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விக்ரம் பிரபு படத்தில் நடிக்கும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி!...

விக்ரம் பிரபு படத்தில் நடிக்கும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி!...

Webdunia 5 days ago
டிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு. கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
அதன்பின் சில வெற்றிப் படங்களை கொடுத்தும் தொடர்ந்து அதை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில்தான் விக்ரம் பிரபுவின் 26 வது படம் தற்போது உருவாகவிருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி நடிக்கவிருக்கிறார். அவர் கதாநாயகியாக நடிக்கிறாரா? அல்லது வேறு கதாபாத்திரமா என்பது படத்தை பார்த்தால் மட்டுமே தெரிய வரும்..

இதுதொடர்பாக தனது மகிழ்ச்சியை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா ஷாஜி 'என்னுடைய கனவு நினைவாகிவிட்டது.. இது என்னுடைய முதல் திரைப்படம்.. இந்த தருணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.. இந்த அழகான படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.. இந்த வாய்ப்பை வழங்கி எனது முதல் பயணத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய பட குழுவுக்கு நன்றி.. இது ஒரு சிறிய தொடக்கமாக இருக்கலாம்.. ஆனால் எனக்கு மிகவும் ஸ்பெஷல்' என உருகியிருக்கிறார். அவரின் இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil