Dailyhunt
Youth: லாபத்தில் பங்கு.. கென் கருணாஸுக்கு கொட்டும் பணம்!.. லக்குன்னா இதுதான்!...

Youth: லாபத்தில் பங்கு.. கென் கருணாஸுக்கு கொட்டும் பணம்!.. லக்குன்னா இதுதான்!...

Webdunia 2 weeks ago
மிழ் சினிமாவில் பல வருடங்களாகவே காமெடி வேடங்களில் நடித்த வந்த கருணாஸின் மகன் கென் கருணாஸ். சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
விடுதலை 2 படத்தில் சின்ன வயது சேதுபதியாக நடித்திருந்தார்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார். நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டிலும் ஆர்வம் கொண்ட கென் கருணாஸ் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார்..

அதன்பின் யூத் என்கிற திரைப்படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் முப்பது கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்திருக்கிறது.

இந்நிலையின், இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கருப்பையா 'யூத் படத்தின் வெற்றிக்கு கென் கருணாஸுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.. கெநை இப்படத்தின் தயாரிப்பாளராக இணைத்து படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வழங்கியிருக்கிறேன்' என சொல்லியிருக்கிறார்.. இதன் மூலம் கென் கருணாஸுக்கு சில கோடிகள் லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil