Dailyhunt
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த புதிய வருமான வரிச்சட்டம் - நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த புதிய வருமான வரிச்சட்டம் - நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

புதிய வருமான வரிச்சட்டம் மற்றும் F&O மீதான அதிக பரிவர்த்தனை வரிவிதிப்பு, வெளிநாட்டு பயணங்களுக்கான குறைந்த டிசிஎஸ் உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அம்சங்கள் ஏப்ரல் 1 (நேற்று) முதல் அமலுக்கு வந்தன.

மேலும், இந்தியாவில் தரவு மைய சேவைகளை கொள்முதல் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 20 ஆண்டு வரி விடுமுறை, மென்பொருள் நிறுவனங்களுக்கான மேம்பட்ட அளவிலான புதிய பரிவர்த்தனை விதிகள் ஆகியவையும், 2026-27 நிதியாண்டின் துவக்கம் முதல் அறிமுகம் ஆகின்றன.

வருமான வரிச்சட்டம் 1961க்கு புதிய வருமான வரிச்சட்டம் 2025, ஏப்ரல் 1, 2026, முதல் அமலுக்கு வருகிறது. வருமான வரி அம்சங்களை மேலும் நட்பு மிக்கதாக, எளிதில் அணுகக் கூடியதாக மாற்றும் வகையில் புதிய சட்டம் அமைகிறது.

மாற்றத்திற்கான இடைப்பட்ட காலத்தில், வருமான வரித்துறையின் இ-பைலிங் தளம் இரண்டு சட்டங்களிலும் தாக்கத்தை ஏற்றுக்கொள்ளும், என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகள் தொடர்பான முறையீடுகள், இதர பரிவர்த்தனைகள் பழைய சட்டம் கீழ் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-27 மதிப்பீடு ஆண்டுக்கு ஜூலையில் வரித்தாக்கல் செய்பவர்கள், பழைய சட்டத்தின் கீழான படிவத்தை பயன்படுத்துவார்கள். ஜூன் 2026 முதலான, 2026- 27 வரி ஆண்டுக்கான முன் கூட்டிய வரித்தாக்கல் புதிய சட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டும்.

வருமானவரிச்சட்டம் 2025, முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீடு ஆண்டு ஆகியவை இடையிலான வேறுபாட்டை நீக்கி, எளிமையாக வரி ஆண்டு எனும் வரைவை கொண்டு வருகிறது. கெடு முடிந்த பிறகு தாக்கல் செய்யப்படும் வரித்தாக்கலிலும் டிடிஎஸ் பிடித்தம் கோரப்பட வழி செய்கிறது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எப்&ஓ மீதான அதிக பரிவர்த்தனை வரி விதிப்பும் அமலுக்கு வருகிறது. முன்பேர ஒப்பந்தங்கள் மீதான வரி, 0.02-ல் இருந்து 0.05 சதவீதமாக இருக்கும். ஆப்ஷன்ஸ் மீதான வரி, தற்போதைய 0.1 மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாகிறது.

இந்த வரி உயர்வு இப்பிரிவில் பங்குகள் மீதான யூக பேர பரிவர்த்தனைகளை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் நலனை நோக்கமாக கொண்டுள்ளது.

இப்பிரிவிலான தனிநபர் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 1.06 கோடியில் இருந்து, 2026 நிதியாண்டில் டிசம்பர் 30 வரை 75.43 லட்சமாக குறைந்துள்ளது.

செய்தி- பிடிஐ


Edited by Induja Raghunathan

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Yourstory Tamil