Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துவிட்டது' எனப் பரவும் ராணுவ வீரரின் போலி வீடியோ!

'ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துவிட்டது' எனப் பரவும் ராணுவ வீரரின் போலி வீடியோ!

YouTurn Tamil 2 weeks ago

2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (PoJK) உள்ள 9 பயங்கரவாத உள்கட்டமைப்புத் தளங்களைக் குறிவைத்து இந்தியா, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூரில்' 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது என்று இந்திய ராணுவத்தின் JCO ( Junior Commissioned Officer) அனுராக் தாக்கூர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவில் 'ANI' ஊடகத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ குறித்து "

" ஊடகப் பக்கத்தில் முதலில் ஆய்வு செய்தோம். ஏப்ரல் 22, 2026 அன்று வைரலாகும் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் காணப்பட்ட ராணுவ அதிகாரி, ஆபரேசன் சிந்தூரில் அவரது குழுவினருடன் சேர்ந்து எதிரி நாட்டினர் அனுப்பிய டிரோன்களை சுட்டு வீழ்த்தி, நாட்டின் முக்கிய தளங்களை பாதுகாத்ததாகவே தெரிவித்திருந்தார்.
ஆனால் பரவி வரும் வீடியோவில் ராணுவ வீரர், "ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது" என்று கூறுவதை காண முடிகிறது.

எனவே வீடியோ AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டிக்கலாம் என்ற சந்தேகம் எழவே, பரவி வரும் வீடியோவை "Hive Moderation" இணையதளப் பக்கத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்பதை உறுதி செய்யமுடிந்தது.

மேலும், "பரவி வரும் வீடியோ போலியாக எடிட் செய்யப்பட்டது" என மறுப்பு தெரிவித்து, ஒன்றிய அரசின்

ஏப்ரல் 23, 2026 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

முடிவு:

நம் தேடலில், 'ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது. என்று இந்திய ராணுவ அதிகாரி கூறியதாகப் பரப்பப்படும் வீடியோ உண்மையானதல்ல. 'ANI' ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்பட்ட உண்மையான வீடியோவை, AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: YouTurn Tamil