உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் எந்தவொரு ஊடகங்களிலும் இது குறித்தான செய்திகள் வெளியாகியாகவில்லை.
இதையடுத்து அந்த வீடியோவில் எச்சில் துப்புவது செயற்கையாக இருப்பதை பார்க்கமுடிந்தது. இதனால் இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தால், பரவி வரும் வீடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக சங்க பரிவார அமைப்புகள் இஸ்லாமியர்களை குறித்து 'எச்சில் ஜிகாத்' என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். The Wire ஊடகத்தில் இது குறித்தான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் 'இஸ்லாமியர்கள் எல்லா இடங்களிலும் எச்சில் துப்பும் பழக்கமுள்ள அநாகரிகமானவர்கள்', 'அவர்கள் கடையில் விற்கும் பொருட்களில் எச்சில் துப்பி தான் கொடுப்பார்கள்' என்பது போன்ற பொய் பிரச்சாரங்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் மத ரீதியான காழ்ப்புணர்வை விதைக்கும் வகையில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவுவது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவானதாகும். கடந்த சில ஆண்டுகளாக சங்க பரிவார அமைப்புகள் இஸ்லாமியர்களை குறித்து 'எச்சில் ஜிகாத்' என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

