தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.
அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே 10 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில், 59 ஆண்டுகளுக்கு பின், அதிமுக., திமுக. அல்லாத புது கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது.
இந்நிலையில் இது தான் பெண்களும், குழந்தைகளும் எதிர்பார்த்த மாற்றத்தின் ஆட்சியா என்று குறிப்பிட்டு காவலரை ஒரு இளைஞர் தாக்க வருவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
Facebook Link:
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
"Geetamilnews" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ கடந்த மார்ச் 05, 2026 அன்று "போலீசுக்கு மிரட்டல் விடுத்த போதை வாலிபர்; கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு! பெண் உதவி ஆய்வாளரையும் காவல்துறையினரையும் தாக்க முயன்ற போதை வாலிபர், வாக்கி டாக்கியை தள்ளிவிட்டு பொதுமக்கள் முன்னிலையில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், காவல்துறையினரை தாக்கிய போதை இளைஞர் என்று கூறி பரவி வரும் வீடியோ, மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது.

