Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக ஆட்சி அமைத்ததும் தஞ்சை பெரிய கோவிலின் அகழி தூய்மை செய்யப்பட்டதா?

தவெக ஆட்சி அமைத்ததும் தஞ்சை பெரிய கோவிலின் அகழி தூய்மை செய்யப்பட்டதா?

YouTurn Tamil 1 week ago

வெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவி வரும் வீடியோவில் தஞ்சை பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழி கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தஞ்சை பெரிய கோயிலின் பூஜை உள்ளிட்ட பணிகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகின்றன. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலின் முன் பகுதியில் உள்ள அகழியில் சீமை கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டநிலையில், இந்திய தொல்லியல் துறையினர் தாங்களே அந்த பணிகளை செய்வதாகவும், நிதியை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ரூபாய் 4.88 கோடி நிதியை இந்திய தொல்லியல் துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. வழங்கி 3 ஆண்டுகளாகியும் (கடந்த 2023 ஆம் ஆண்டில்) அகழி மேம்பாட்டு பணிகளை இந்திய தொல்லியல் துறையினர் தொடங்கவில்லை என்பதை கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது.

இந்நிலையில் தற்போது தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், "தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி மே 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை பெரிய கோவிலின் பின்புறம் சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு அகழி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3.5 கோடியில் ஏழு புதிய அதிநவீன ஜே.சி.பி இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன" என்றும்

.

இந்நிலையில் தற்போது தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணி மே 16 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2026 மே 10 அன்று தான் தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:

நம் தேடலில், தவெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: YouTurn Tamil