Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திடக்கழிவுகள் மேலாண்மையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகமா? செய்தியை திரித்து வெளியிடும் 'தந்தி டிவி' ஊடகம்!

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திடக்கழிவுகள் மேலாண்மையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகமா? செய்தியை திரித்து வெளியிடும் 'தந்தி டிவி' ஊடகம்!

YouTurn Tamil 1 week ago

மிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரத்தில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது துர்நாற்றம் வீசாமலும் சாலையில் கொட்டாமலும் அட்வான்ஸ் டெக்னாலஜி முறையில் கொண்டு செல்லப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளதாகவும் 'தந்தி டிவி' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன?

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் டெண்டர் விடப்பட்டு பின்னர், அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால் தவெக அரசு பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் எந்த திட்டத்தையும் டெண்டர் விடப்பட்டு செயல்படுத்தமுடியாது. இந்நிலையில் தந்தி டிவி வெளியிட்ட இந்த செய்தியில் சந்தேகம் ஏற்பட்டதால், இது குறித்து தேடிப் பார்த்தோம்.

அப்போது தாம்பரம் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை 2025ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதன்படி, திமுக ஆட்சியில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்றே, தாம்பரம் மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டு டெண்டர் வெளியிடப்பட்டது தெரியவந்தது. அந்த டெண்டர் வெளியிடப்பட்டு தற்போது இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை திரித்து தான் "தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திடக்கழிவுகள் மேலாண்மையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்" என்று தந்தி டிவி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு:

எனவே, தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தாம்பரத்தில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: YouTurn Tamil