Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியாவில் எடுக்கப்பட்டது போல் பரப்பும் பாஜகவினர்!

வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியாவில் எடுக்கப்பட்டது போல் பரப்பும் பாஜகவினர்!

YouTurn Tamil 3 weeks ago

டெல்லி பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர்களை இந்து மாணவிகள் காதலிக்க அறிவுரை வழங்கிய ஆசிரியரை மாணவிகள் தாக்கிய காட்சி என்று சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

உண்மை என்ன?

முதலில் வைரலான வீடியோவின் முக்கியக் காட்சிகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Bangla News 24 ஊடகத்தின் யூடியூப் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் ஏப்ரல் 26, 2026 வைரலான வீடியோவில் உள்ள அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலைக்கழகத்தில் வெளிநபர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மாணவர்கள் அந்த நபரை தாக்கி, பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடியப் போது, இதே வீடியோ ஏப்ரல் 26, 2026 அன்று வங்கதேசம் செய்தி நிறுவனமான Aajker Patrika, அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவிலும் இச்சம்பவம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகவே குறிப்பிட்டிருந்தது.

முடிவு:

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, "டெல்லி பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர்களை இந்து மாணவிகள் காதலிக்க அறிவுரை வழங்கிய ஆசிரியரை மாணவிகள் தாக்கிய காட்சி" எனப்பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோ எடுக்கப்பட்டது வங்கதேசத்தில், இந்தியாவில் அல்ல.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: YouTurn Tamil