டாக்டர் சோம.இளங்கோவன் டாக்டர் சோம.இளங்கோவன் தந்தை பெரியார் அவர் களின் தொண்டன் என்றும், ஆசிரியர் அவர்களின் மாணவன் என்றும் தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்பவர் திரு. சோம. இளங்கோவன் அவர்கள்.காரணம்?சிறுவயது முதலே திராவிடர் கழகக் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் தனது சித்தப்பா பி.வி.ஆர். எனப்படும் பிவே. இராமச்சந்திரன் அவர்களுடன் சென்று வந்ததுதான் என்கிறார் திரு. சோம.இளங்கோவன். ஆம்; வழிய வழிய பெரியாரியத் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை இவர்! அதனால்தான், பள்ளி நாட்களிலேயே கையில் மெகாபோனை எடுத்துக் கொண்டு உள்ளூரில் நடைபெறும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் பற்றித் தெருத்தெருவாகப்போய் அறிவிப்பு செய்வது, போராட்டங்களின்போது முழக்கங்கள் எழுப்புவது என்று வாழ்க்கைக்கு வனப்பு சேர்த்திருக்கிறார்.1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் பெரியாரைச் சந்தித்துப் பெற்ற அறிவுரைகளோடு அமெரிக்கா சென்ற இவர், குடல் மருத்துவராகி சிகாகோவில் செயலாற்றினார்.அத்துடன் சிகாகோ தமிழ்ச்சங்கம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை ஆகியவற்றின் தலைமைப் பொறுப் பேற்று தமிழ்ப் பணியும் ஆற்றி வருகிறார்.25 ஆண்டுகளுக்கு முன் பெரியார் பன்னாட்டு அமைப்பைத் தொடங்கி பெரியாரியலை பன்னாட்டு அளவில் பரப்பும் பணிகளில் ஒரு பாலமாக இருப்பவர்.2017ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள கொல்லோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய தில் இவரது பங்கு அளப்பரியது!அதேபோல், 2019ஆம் ஆண்டு அமெரிக்க மேரிலாண்டில் நடைபெற்ற மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டி லும் இவரது பங்கானது மிகச் சிறப்பானதாகும்!சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான விருதை பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் வழங்கி வருகிறார்.நண்பர்களுடன் இணைந்து "வீரமணி சமூகநீதி விருது" நிறுவியதோடு, அந்த விருதை, அமெரிக்காவின் தலைசிறந்த மனிதநேயப் பற்றாளர் பேராசிரியர் பால்கர்ட்சுவை தமிழ்நாட் டிற்கு அழைத்து வந்து மாண்புமிகு கலைஞர் அவர்கட்கு சமூகநீதிக்கான வீரமணி விருதை வழங்கச் செய்து பெருமைச் சேர்த்தார்.உலகிலுள்ள மற்ற நாடுகளும் நமது இயக்கத்திற்கும் பாலமாக இருந்து பெரியார் கொள்கைகளை பன்னாட்டு அளவில் பரப்புவதில் ஈடு இணையற்றவர் மருத்துவர் சோம.இளங்கோவன்.