Dailyhunt
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

APC News Tamil 5 days ago

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைத்தாலும், திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிருப்தாக காதர் மொகிதீன் தெரிவித்துள்ளாா்.

​தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள நிலையில், காதர் மொகிதீன் முக்கியக் கருத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான நலத்திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தத் திட்டங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி, அமையும் புதிய ஆட்சியிலும் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

​இது குறித்து காதர் மொகிதீன் கூறுகையில்,​”திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை. தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியிலும் இந்தத் திட்டங்கள் தொய்வின்றித் தொடரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது.”

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி ஏற்படுவதைத் தவிர்க்கவும், ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்ற நோக்கிலும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், தங்களது இந்த ஆதரவு திமுக தலைமையிலான “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை”எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

திமுக அரசின் ‘திராவிட மாடல்’ திட்டங்கள் புதிய அரசால் உள்வாங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலனே முக்கியம் என்பதை சுட்டிக்காட்டினார்.திமுக-வுடனான கொள்கை ரீதியிலான உறவு தொடரும் என்பதில் உறுதி. விஜய் தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் புதிய அரசின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? - புது அரசுக்கு வந்த சோதனை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil