Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய கர.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய கர.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Cineulagam 2 weeks ago

கர

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு குபேரா, தேரே இஷ்க் மே, இட்லி கடை ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

இந்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான கலவையான விமர்சனங்களை பெற்றன.

நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சவுத்ரியின் ஆசை! விஜய் நினைத்திருந்தால்..

இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கர. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி வருகிறது.

இந்த நிலையில், இதுவரை உலகளவில் கர திரைப்படம் செய்துள்ள வசூல் ரூ. 42 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam