அய்யனார் துணை சீரியல்
சேரன், நிலா மற்றும் சோழன் மூவரும் பீகாருக்கு சென்றிருந்தபோது, பாண்டியன் மற்றும் பல்லவனை வானதி பார்த்துக்கொண்டார்.
அதுவும் காலை, மாலை என தொடர்ந்து வீட்டிற்கு வந்து சமைத்து கொடுத்தார். ஆனால், வானதி சமையல் சுமாராக இருந்ததால், பாண்டியனும், பல்லவனும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டனர்.

அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்..
பீகாரில் இருந்து சேரன், நிலா, சோழன் வீட்டிற்கு திரும்ப வந்த நிலையில், வானதி சமைத்தது நன்றாகவே இல்லை, வாயில் கூட வைக்க முடியவில்லை என பல்லவன் கூறினார். இதை கேட்டு அனைவரும் சிரித்தனர். இதனால் வானதி மனமுடைந்துபோனார். பாண்டியன் கூட தனக்கு துணையாக நிற்கவில்லை என கவலைப்பட்டார்.



