Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஆர்.சி.பி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. இறுதிப்போட்டிக்கான மைதானத்தை மாற்றிய பி.சி.சி.ஐ - விவரம் இதோ

Crictamil 3 weeks ago

ந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 2026 ஆம் ஆண்டிற்கான 19 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது இந்த பிளே ஆப் சுற்றில் முதல் நான்கு இடங்களை எந்தெந்த அணிகள் பிடிக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதனால் இந்த இறுதிகட்ட போட்டிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நடைபெறும் மைதானம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இறுதிப்போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றிய பி.சி.சி.ஐ :

அந்த வகையில் வெளியான அறிவிப்பில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இருந்து இறுதிப்போட்டி தற்போது அதிரடியாக அகமதாபாத் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதால் நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி அணியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தான் வழக்கப்படி இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெற வேண்டும்.

ஆனால் தற்போது அந்த முடிவை மாற்றியுள்ள பி.சி.சி.ஐ அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிளே ஆப் சுற்று போட்டிகளில் முதலாவது குவாலிபயர் போட்டியானது மே 26-ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறும் என்றும் அதன்பின்னர் மே 27-ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி மற்றும் மே 29-ஆம் தேதி இரண்டாவது குவாலிபயர் போட்டியும் சண்டிகர் நகரில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இப்படி பிளே ஆப் சுற்றும் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்ற காரணம் யாதெனில் : போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டும் முக்கியமான இந்த பிளே ஆப் போட்டிகள் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என்பதையும் யோசித்தே பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியில் இருந்து விலகும் ஹார்டிக் பாண்டியா - என்ன காரணம்?

அதேபோன்று சின்னசாமி மைதானத்தில் இருந்து இறுதிப்போட்டி மாற்றப்பட காரணம் யாதெனில் : பெங்களூரு கிரிக்கெட் வாரிய சங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வெளியான சில நிபந்தனைகள் பி.சி.சி.ஐ-யின் முடிவுக்கு அப்பாற்பட்டு இருந்தாலே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil