Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

இந்தாண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி இதுதான் - ரவிச்சந்திரன் அஷ்வின் உறுதி

Crictamil 1 week ago

ந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான 19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய ஆர்.சி.பி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கோப்பையை கைப்பற்றப்போவது யார் ? : அஷ்வின் கணிப்பு

பின்னர் எலிமினேட்டர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக ஆர்.சி.பி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மே 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாட இருக்கின்றன.

இவ்வேளையில் இந்த 2026 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வழங்கி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இறுதி போட்டியில் வெல்லப்போகும் அணி குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த தொடரை பொருத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணியானது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே அந்த அணி முதலாவது குவாலிபயர் போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீண்டும் எழுச்சி பெற்று கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

மும்பை அணியிலிருந்து வெளியேறும் முடிவை ஏற்கனவே எடுத்த ஹார்டிக் பாண்டியா - காரணம் என்ன?

அதிலும் குறிப்பாக குஜராத் அணியிடம் ரபாடா, சிராஜ், ஹோல்டர் போன்ற சிறப்பான பந்துவீச்சு துறை இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்று தோன்றுவதாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil