Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 564/8 (கே.எல்.

ராகுல் 100, சாய் சுதர்ஷன் 81, ஷுப்மன் கில் 126, ரிஷப் பந்த் 81, வாஷிங்க்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 51, முகம்மது சலீம் 6/140) ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸ் 152 (ரஹ்மத் ஷா 60, மானவ் சுத்தர் 6/33, பிரசித் கிருஷ்னா 3/37( இரண்டாவது இன்னிங்க்ஸ் 112 (செதிகுல்லா அடல் 42, ரஹ்மானுல்லா குர்பாஸ் 24, வாஷிங்க்டன் சுந்தர் 4/36, குல்தீப் யாதவ் 3/30). இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, டெஸ்ட் ஆட்டங்களின் வல்லுநர்கள் புஜாரா, ரஹானே, சுழல் பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜதேஜா, பும்ரா இல்லாத இந்திய அணி. தொடக்க வீரர்களாக யசஷ்வீ ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல்; மூன்றாவது இடத்தில் சாய் சுதர்ஷன்; ஷுப்மன் கில் அணித்தலைவராக நான்காவது இடத்தில்; வேகப்பந்துவீச்சாளர்களாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இன்று விளையாடினர். புதிய சுழப் பந்துவீச்சாளராக மானவ் சுத்தர் இந்த டெஸ்டில் களமிறங்கினார். அதிகாரபூர்வமற்ற இந்த டெஸ்டில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது.

ஜெய்ஸ்வால் 24 ரன்னிற்கு ஆட்டமிழக்க, கே. எல் ராகுல் (100 ரன்) மற்றும் சாய் சுதர்ஷன் (81 ரன்) சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு பின்னர் வந்த கில் (126 ரன்) மாற்றும் ரிஷப் பந்த் (81 ரன்)இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கட் இழப்பிற்கு 368 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் இந்திய அணி 564 ரன்னிற்கு ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக் அறிவிக்க, ஆஃப்கானிஸ்தான் அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 113 ரன் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் அந்த அணி முதல் இன்னிங்க்சை 152 ரன்னிற்கு ஆட்டமிழந்தது. அதனால் ஃபாலோஆன் முறையில் இரண்டாம் இன்னிங்க்ஸை தொடர்ந்து ஆடியது.

ALSO READ:சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இரண்டாம் இன்னிங்க்ஸில் வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்த ஆஃப்கானிஸ்தான் அணி 112 ரன்னிற்கு ஆட்டமிழந்து, ஒரு இன்னிங்க்ஸ் 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

அடுத்து இந்திய அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் ஆட்டங்களை ஆடவிருக்கிறது. முதல் ஒருநாள் ஆட்டம் 13.06.2026 அன்று தர்மசாலாவிலும் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் 17.06.2026 அன்று லக்னோவிலும் மூன்றாவது ஒருநாள் ஆட்டம் 20.06.2026 அன்று சென்னையிலும் நடக்கவுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ALSO READ:சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari