Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

பிஜேபி., உள்ள வந்துடும்!

ன்டிஏ கூட்டணி முற்றிலும் தமிழகத்திற்கு விரோதமானது. அவர்களுக்குத் தமிழ் மண்ணில் ஒரு சீட் கூடக்கிடைக்காது என்று அபத்தமாக பேசி வருகிறார் கனிமொழி .

உண்மையில் மோடி அரசு தமிழர்களுக்கு விரோதமானவரா?யார், நீங்கள்தான் தமிழர்கள் விரோதிகள் ? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் ஈழத்தமிழர் முள்ளிவாய்க்கால் மரணங்களுக்கு யார் காரணம்?

இத்தனை வருடம் ஆட்சி செய்தும் மத்திய அமைச்சரவையில் 18 வருடங்கள் பங்குபெற்றும் கூடத் தமிழை ஆட்சி மொழியாக ஏன் உங்களால் கொண்டு வர முடியவில்லை! இப்போது வந்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் மட்டும் என்ன பலன்?

ஆனால் உங்கள் குழந்தைகளை மட்டும் இந்திப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்! உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் டெல்லிக்கு எம்பி ஆகப் போக வேண்டும் என்கிற முறையில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறோம் என்று மக்களிடம் இரட்டை முகம் காட்டுகிறீர்கள்.

மட்டுமல்லாமல் நாடாளுமன்றத் திமுக வேட்பாளர்களுக்கான நேர்முகத்தில் உங்களுக்கு இந்தி தெரியுமா என்றும் கேட்கிறீர்கள்?! இந்த லட்சணத்தில் பாஜகவை எதிர்ப்பதாகவும் பாஜக வந்தால் இந்தி வந்துவிடும்! தமிழ் ஒழிந்து விடும் என்று இதே பொய்ப் பிரச்சாரத்தை எத்தனை வருடம் செய்வீர்கள்? எங்கே பிஜேபி தமிழருக்கு எதிராக இருந்தார்கள்.

ALSO READ:இக்கணம் - தேவை சிக்கனம்!

கனிமொழி தொகுதியில் குலசேகரப்பட்டினத்திற்கு ராக்கெட்ஏவு நிலையம்
30, 000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி துறைமுகம் , தூத்துக்குடி விமான நிலைய மத்திய அரசுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அன்றைக்கு எல்லாம் ஒரு சீட் கூட பிஜேபிக்கு கிடைக்கவில்லை! ஆனால் அவர்கள் தமிழகத்திற்கு இத்தனை வசதிகளையும் செய்திருக்கிறார்களா இல்லையா?

நீங்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி பேசுகிறீர்களே! நீங்கள் எத்தனை துரோகங்களை தமிழகத்திற்குச் செய்திருக்கிறீர்கள்! சேது சமுத்திரத் திட்டத்தைத் தோண்ட தோண்ட மண் சரியசரிய தோண்ட தோண்ட எவ்வளவு பணத்தை விரயம் பண்ணி அதில் எத்தனை ஊழல் செய்து நீங்கள் கொழுத்திருக்கிறீர்கள்.

அத்தனையும் தோல்வியில் முடிந்த பிறகும் உங்கள் தகப்பனார் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சவால் விட்டுவிட்டும் போய்விட்டார்.

அத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி அரசுப் பணம் வீணாகி விட்டது. ஒருபிடி மண்ணைக் கூட பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முட்டாள் தனமாகப் பேசினீர்களே! இன்றைக்கு இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்டு விட்டீர்களா?

ALSO READ:திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

திமுக போட்ட அத்தனை திட்டங்களிலும் ஊழல்! கேட்டால் பாஜக தமிழ்த்திற்கு துரோகம் செய்தது என்று பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டே நீங்கள் செய்த அத்தனை அட்டூழியங்களையும் மறைத்துக் கொண்டு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் பாஜகவை குற்றம் சாட்டுகிறீர்கள்.

எதிலும் ஒரு நியாயம் ஒரு அரசியல் எதார்த்தம் ஒரு அறநெறி எதுவுமே இல்லையே! எதற்கும் கட்டுப்படாமல் இவ்வளவு கேவலமாக உங்கள் குடும்ப அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். போக உங்கள் மாவட்ட செயலர்கள் மந்திரிகள் என அவர்கள் குடும்பங்களையும் இந்த ஊழல்களின் மூலம் காப்பாற்றிக் கொண்டு வருகிறீர்கள்.

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari