Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

எப்போது பார்த்தாலும் ராங்க் எடுப்பதற்கான ஓட்டமும், பணம் சம்பாதிப்பதிற்கு முன்னுரிமை அளிப்பதுமே தம் பிள்ளைகளுக்கு முக்கியம் என்று பெற்றோர் கருதுகின்றனர். அதனால்தான் தாமும் கடைப்பிடிக்காமல் பிள்ளைகளுக்கும் கற்றுத் தராமல், பழக்கப்படுத்தாமல் தர்மத்திலிருந்து தொலைவாக விலகிச் செல்கிறார்கள். தர்மத்தின் மீது அர்பணிப்பு மனப்பான்மை, அனுஷ்டான பயிற்சிகள் இல்லாது போவதால் இந்தச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த வெற்றிடத்தை பிற மதங்கள் பயன்படுத்திக் கொண்டு, தீய உத்திகளைக் கையாண்டு மதமாற்றங்களை அரங்கேற்றுகிறார்கள். ஐயம் ஏதும் கொள்ளாத ஹிந்து இளைய தலைமுறையின் மூளையில் தம் மதக் கோட்பாடுகளைத் திணிக்கிறார்கள். அவையே மிகச் சிறந்தவை என்ற பிரமையை உருவாக்குகிறார்கள். தம் பாரம்பரியம் பற்றி அறிவின்மையாலும், அறிந்துள்ள வேண்டும் என்ற நாட்டம் இன்மையாலும் இளைஞர்களும், யுவதிகளும் பிறரால் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். உடல் ரீதியான ஈர்ப்பும், உலகியல் போகங்களின் மேல் ஏற்படும் பேராசையும் அவர்களுடைய விவேகத்தை வேலை செய்ய விடாமல், பகுத்தறியும் திறனை மழுங்கடித்து விடுகின்றன.

கல்லூரிப் பருவத்திலேயே இத்தகைய ஆசைகளுக்கும், பிரமைகளுக்கும் உள்ளாகி கட்டுப்பாடற்ற நடத்தையாலும், கூடா நட்பாலும், முறையற்ற உடல் ரீதியான தொடர்புகளாலும் மதம் மாறுகிறார்கள். உண்மையில் காதலே முக்கியமென்றால் அவர்களைத் தம் ஹிந்து மதத்திற்கு மாறச் சொல்லி கேட்கலாம் அல்லவா? அவர்களுக்கு இருக்கும் மத ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தம் தாய் மதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அறிவியல் பூர்வமான பாரம்பரியமும், நல்லொழுக்கமும், உலகம் வியந்து மதிக்கும் தத்துவ சிந்தனையும், அற்புதமான கலைச் செல்வங்களும், யோகக்கலையும், மந்திர சாதனைகளும் கொண்ட அற்புதமான ஹிந்துமதத்தை விட உயர்ந்தது வேறொன்று உண்டு என்று எப்படி இவர்களால் எண்ண முடிகிறது? அப்படியென்றால் இந்த அற்புத அம்சங்களைத் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதது பெற்றோரும், பெரியவர்களும் செய்யும் பெருங்குற்றம்.

சிறுவயது முதல் நம் ஹிந்து மதம் பற்றி அறிஞர்களின் உரைகள், சந்தேகங்களுக்கு அளித்த பதில்கள், ஆலயங்களின் சிறப்பான தனித்தன்மை, அவற்றின் சரித்திரம், நம் தேசத்தின் மீதும் சனாதன தர்மத்தின் மீதும் நடந்த பயங்கரமான் தாக்குதல்கள், அவற்றை எதிர்கொண்டு உயிர் துறந்த தியாகிகள், யோக சித்தி பெற்ற மகநீயர்களின் வாழ்க்கை வரலாறு, போதனைகள், சாஸ்திரங்கள் போன்ற நல்ல விஷயங்களை பிள்ளைகளுக்குக் கற்றுத் தராததும் தாமும் கற்றுக் கொள்ளாததும் இத்தகைய விபரீதமான சூழ்நிலைக்கு முக்கிய காரணம். தம் பராம்பரியத்தின் மீது குறைந்தபட்ச கௌரவம் கூட ஏற்படுத்த இயமால் போவது கவலைக்குரியது. வருந்தத் தக்கது

கல்வி நிலையங்கள் முதல், பணி புரியும் உயர் நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் மதத் தீவிரவாதிகள் ஊடுருவி, மத மாற்றங்களே நோக்கமாக, ஹிந்து மதத்தை அழிப்பதே லட்சியமாக, பாரத தேசத்தில் அமைதியின்மையையும் குழப்பத்தையும் பிளவையும் தோற்றுவிப்பதற்குச் சற்றும் தயங்குவதில்லை.

அண்மையில் நாசிக்கிலும், வேறு சில இடங்களிலும் நூற்றுக்கணக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தொடர்ந்து, சில ஆண்டுகளாகவே நடக்கும் இவ்விதமான மத வெறித் தாக்குதல்களின் செய்திகள் பெருமளவில் வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றின் மூலம் அவர்களுக்கு நமது மதத்தின் மேல் இருக்கும் பகையும், வெறுப்பும் தெளிவாகத் தெரியவருகின்றன.

இத்தருணத்தில் மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பு, நியமத்தோடு கூடிய வாழ்க்கையில் இருக்கும் தெய்வீகம், புனிதம் போன்றவற்றை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். பிற மதத்தவர் தம் மதத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அதன் மேல் முழு மதிப்பும், தன்மானமும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய உணர்வுகள் ஹிந்து குடும்பங்களில் ஏன் இல்லை?

'காதல்' என்ற பெயரில் காமக் கேளிக்கையின் மேல் ஆசை கொண்டு, பிறருடைய வஞ்சனையில் சிக்கி வருந்துவது மானசிக பலவீனம் இல்லையா? இந்த பலவீனமே பிறகு அவமானகரமாக, மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கிறது. அதன் பிறகு அநியாயம் நடந்து விட்டது என்று அழுதும், பிரச்சனை செய்தும் என்ன பயன்?

ALSO READ:நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் குற்றம் அந்தப் பக்கம் இருப்பவர்களுடையது மட்டுமே அல்ல. அதற்கு இடம் கொடுத்த மன விகாரம், விவேகமின்மை, எதற்கும் துணிந்த பொறுப்பற்ற தனம் உள்ள இந்தப் பக்கம் இருப்பவர்களுடையதும் குற்றமே.

பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாகக் கொண்ட கல்வி முறைக்கும், மனப்பான்மைக்கும் கிடைக்கும் கொடுமையான, கசப்பான வெகுமதி இது. நம்முடைய உயர்ந்த தர்மக் கோட்பாடுகள் வக்கிரமாக சித்திரிக்கப்படும் போது உதாசீனமாகவும், அலட்சியமாகவும் இருப்பதோடு, சனாதன தர்மம் பற்றிய சரியான புரிதல் இன்றி, பிற மதத்தவரின் வியூகங்களில் சிக்கி சொந்த மதத்தில் இருந்து விலகி பிரஷ்டர்கள் ஆகிறார்கள்.

பிள்ளைகளை அடிக்கடி நம் கோவில்களுக்கு அழைத்துச் செல்வது, நம்முடையதான ஸ்தோத்திரங்களையும் மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்து தினமும் படிக்கச் செய்வது, நாம சங்கீர்த்தனம், வார இறுதியில் சிறப்பு பாராயணம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினால், அந்த தெய்வ சக்தியின் தாக்கத்தால் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்பட்டு தீய குணங்கள் மனத்தில் எழாமல், வாழ்க்கையை காப்பாற்றும் என்பதில் ஐயமில்லை. நம்முடையதான பாரம்பரிய உடை அணிதல், நெற்றியில் சமயச் சின்னங்களைத் தரித்தல், அவற்றை மதித்தல், பொருளாதார உயர்வு ஏற்படும் போது உலகியல் போகங்களுக்கும் தீய பழங்கங்களுக்கும் அடிமையாகாமல், அடக்கத்தோடு தார்மீக சேவை நிகழ்சிகளில் ஈடுபடுவது போன்றவற்றைக் கற்றுத் தந்தால் இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருந்திருக்குமோ என்னவோ.

ALSO READ:பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

சனாதன தர்மத்தின் மேல் சுயமரியாதையையும், தேசத்தின் மேல் கடமை உணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலைத் தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டும். அது வாழ்வாதாரத்திற்கான வழியாக உணர வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. முன்னோர்களிடம் இருந்து கிடைத்த பாரம்பரியச் செல்வமான ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதும், சம்பிரதாய விழுமியங்களையும் காப்பாற்றிக் கொள்வதும் வாழ்வின் நோக்கம் என்று சிறு வயது முதல் கற்றுத்தர வேண்டும்.

(Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், மே, 2026)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari