Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026

—முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்—

ரவுண்ட் 32 - அதாவது 32 அணிகள் சுற்றில் மொத்தம் 16 ஆட்டங்கள்.

28 ஜூன் அன்று ஒரு ஆட்டமும் 29, 30 ஜூன், 01, 02,03 ஜூலை ஆகிய நாட்களில் தலா மூன்று ஆட்டங்களும்!

முதல் ஆட்டம் ஜூன் 28, 2026 - தென் ஆப்பிரிக்கா கனடா இடையேயான ஆட்டம். கனடா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரண்டாவது ஆட்டம் ஜூன் 29, 2026 - பிரேசில் ஜப்பான் இடையேயான ஆட்டம். பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்றாவது ஆட்டம் ஜூன் 29, 2026 - ஜெர்மனி பராகுவே இடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன. பின்னர் 30 நிமிட நேர அதிக வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்ல. அதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை தொடங்கியது. அதில் பராகுவே 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்றது. கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருந்த ஜெர்மனி இந்த ஆட்டத்துடன் வெளியேறியது இந்தப் போட்டியின் மிகப் பெரிய அப்செட் ஆகும்.

ALSO READ:ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

நான்காவது ஆட்டம் ஜூன் 29, 2026 - நெதர்லாந்து மொராக்கோ இடையேயான ஆட்டம். இந்த ஆட்டமும் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. மொராக்கோ ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐந்தாவது ஆட்டம் ஜூன் 30, 2026 - ஐவரி கோஸ்ட் நார்வே அணிகளுக்கிடையேயான ஆட்டம். நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆறாவது ஆட்டம் ஜூன் 30, 2026 - ஃபிரான்சு, சுவீடன் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஃபிரான்சு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஏழாவது ஆட்டம் ஜூன் 30, 2026 - மெக்சிகோ, ஈக்வடார் அணிகளுக்கிடையேயான ஆட்டம். மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

எட்டாவது ஆட்டம் ஜூலை 1, 2026 - இங்கிலாந்து, டி ஆர் காங்கோ அணிகளுக்கிடையேயான ஆட்டம். இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஒன்பதாவது ஆட்டம் ஜூலை 1, 2026 - பெல்ஜியம், செனேகல் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்தன. பின்னர் அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் பெல்ஜியம் அணி ஒரு பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தது. இதனால் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

ALSO READ:நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

பத்தாவது ஆட்டம் ஜூலை 1, 2026 - அமெரிக்க, பொசானியா & ஹெர்சகோவினியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதினோறாவது ஆட்டம் ஜூலை 2, 2026 - ஸ்பெயின், ஆஸ்திரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பன்னிரெண்டாவது ஆட்டம் ஜூலை 2, 2026 - போர்ச்சுகல், க்ரோஷியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதிமூன்றாவது ஆட்டம் ஜூலை 2, 2026 - ஸ்விட்சர்லாந்து, அல்ஜீரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்விட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதினான்காவது ஆட்டம் ஜூலை 3, 2026 - ஆஸ்திரேலியா, எகிப்து அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. எனவே ஆட்டம் மேம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் தரப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 2 கோல்களும் எகிப்து 4 கோல்களும் போட்டன. இதனால் எகிப்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

ALSO READ:மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

பதினைந்தாவது ஆட்டம் ஜூலை 3, 2026 - அர்ஜெண்டைனா, கேப் வெர்டே அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டிருந்தன. எனவே ஆட்டம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அந்த அரை மணி நேரத்தில் அர்ஜெண்டைனா ஒரு கோல் அடித்தது. இதனால் அர்ஜெண்டைனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதிநனாறாவது ஆட்டம் ஜூலை 3, 2026 - கொலம்பியா, கானா அணிகளுக்கிடையேயான ஆட்டம். கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari