Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

FIFA 2026: ரவுண்ட் 16. கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026 : ரவுண்ட் 16 கடைசி நான்கு ஆட்டங்கள்

போர்ச்சுகல் அதிர்ச்சித் தோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாலு ஆட்டங்கள் ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடந்தது. இதில் போர்ச்சுகல் அணி ஸ்பெயின் அணியிடல் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இது போட்டியின் ஒரு அப்செட் தோல்வியாகும். அதுபோல போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்க அணி பெல்ஜியம் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. போட்டியை நடத்தும் மூன்று நாடுகளும் போட்டியில் இருந்து தோல்வியடைந்து விலகிவிட்டன.

காலியிறுதிக்கு முந்தைய கட்டத்தின் ஐந்தாவது ஆட்டம் ஆர்லிங்க்டனில் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. போர்ச்சுகல், ஸ்பெயின் அனிகள் மோதின. இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டநேர இறுதி வரை சென்றன. ஆனால் 91ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் மிக்கல் மெரினோ கோல் அடித்தார். 'லா ராஜா' என ஸ்பானிஷ் மொழியில் அழைக்கப்படும் ஸ்பேயின் அணி இந்த ஒற்றை கோலால் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டொ இந்தத் தோல்வியால் மனமுடைந்து போனார்.

ALSO READ:FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

ஆறாவது ஆட்டம் அமெரிக்கா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையே சியாட்டிலில் ஜூலௌ 6ஆம் தேதியன்றெ நடைபெற்றது. இதில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏழாவது ஆட்டம் அர்ஜெண்டைனா, எகிப்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடந்தது. ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்திலும் 67ஆவது நிமிடத்திலும் கோலடித்து எகிப்து அணி கோலடித்து முன்னணியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அர்ஜெண்டைனா அணியின் ரொமெரோ (79ஆவது நிமிடம்), மெஸ்ஸி (83ஆவது நிமிடம்), ஃபெர்னான்டஸ் (92ஆவது நிமிடம்) கோல் அடித்து அர்ஜெண்டைனா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறவைத்தனர். இந்த ஆட்டத்தில் நடுவர்கள் எகிப்து அணிக்கு எதிராகவும் அர்ஜெண்டைனா அணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும் கோல் போடவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

ALSO READ:விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

காலிறுதி ஆட்டங்கள்

ஜூலை 9இல், ஃபாக்ஸ்பர்ரோவில் ஃபிரான்சு, மொராக்கோ அணிகளுக்கு இடையேயும்

ஜூலை 10ஆம் நாள் இங்க்லேவுட்டில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயு

ஜூலை 11இல், மியாமியில் இங்கிலாந்து, நார்வே அணிகளுகிடையேயும்

ஜூலை 11இல் கன்சாஸில் அர்ஜெண்டைனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயும் நடைபெறுகின்றன.

பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜேண்டைனா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது என்னுடைய கணிப்பு.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari