Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

முதல் சுற்று முடிந்து 32 அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

32 அணிகள் விளையாடும் இரண்டாம் சுற்றும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை மிகப் பெரிய அப்செட் என்று சொல்வதானால் அது ஜெர்மனி இரண்டாம் சுற்றில் தோற்று போட்டியை விட்டு வெளியேறியதுதான்.

முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா அணிகள் தேர்வு பெற்றன. குரூப் பி பிரிவில் சுவிட்சர்லாந்து, கனடா, பொசானியா மற்றும் ஹெர்சகொவினியா ஆகிய மூன்று அணிகள் தேர்வுபெற்றிருக்கின்றன. குரூப் சி பிரிவில் பிரேசில், மொராக்கோ அணிகள் தேர்வுபெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே ஆகிய அணிகள் அடுத்த சுற்றிற்கு முனேறியுள்ளன.

குரூப் ஈ பிரிவில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட், ஈக்வடார் ஆகிய அணிகள் அடுத்த ரவுண்டிற்குச் சென்றுள்ளன. குரூப் எஃப் பிரிவில் நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. குரூப் எச் பிரிவில் ஸ்பெயின், கேப் வெர்டெ அணிகள் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளன.

குரூப் ஐ பிரிவில் ப்ரான்சு, நார்வே, செனகல் ஆகிய அணிகள் ரவுண்ட் 32க்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜே பிரிவில் அர்ஜெண்டைனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் கே பிரிவில் கொலம்பியா, போர்ச்சுகல், டி ஆர் காங்கோ ஆகிய அனிகள் முன்னேறியுள்ளன. குரூப் எல் பிரிவில் இங்கிலாந்து, க்ரோஷியா, கானா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ALSO READ:ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari