Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

ந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தபின்னர், இந்திய அணி இங்கிலாந்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடுகிறது. இதில் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் நேற்ரு (14.07.2026) நடந்தது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் (43 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தார். அவருடன் களமிறாங்கிய மற்றொரு தொடக்க வீரர் ஜேகப் பெதல் (14 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த ஜோ ரூட் (76 ரன்) சிறப்பாக ஆடினார். தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த குர்நூர் ப்ரார் போலவே பும்ரா, பிரசித் கிருஷ்ணா இருவரும் ஹாரி ப்ரூக் (1 ரன்), ஜாஸ் பட்லர் (5 ரன்), சாம் கரண் (பூஜ்யம் ரன்) ஆகியோரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தனர். அதன் பின்னர் வில் ஜேக்ஸ் (20 ரன்) மற்றும் லியம் டாசன் (68 ரன்) இருவரும் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் அக்சர் படேல் நான்கு விக்கட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியை 47.5 ஓவர்களில் 258 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக்கினார்.

இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணியில் ஒருநாள் ஆட்டத்தின் வல்லுநர்களாகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா (21 பந்துகளில் 11 ரன்) மாற்றும் விராட் கோலி (6 பந்துகளில் 5 ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷுப்மன் கில் (80 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (35 ரன்) இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை நிதானமாக மேலெடுத்துச் சென்றனர். கில் காயம் காரணமாக வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின்னர் உள்ளே வந்த கே.எல். ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 27.5 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்திருந்தது. இன்னும் 95 ரன் தேவைப்பட்ட நிலையில் வாஷிங்க்டன் சுந்தர் (52 ரன்), அக்சர் படேல் (57 ரன்) இருவரும் இணைந்து இந்திய அணிக்கு, 45.2 ஓவர்களில் (262 ரன்) வெற்றியைத் தேடித்தந்தனர்.

ALSO READ:FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

டி-20 தொடரில் சொதப்பிய அதே வீரர்கள் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றியைப் பெற உதவியது மகிழ்ச்சியை அளிக்கிறது. அக்சர் படேல் (4 விக்கட், 57 ரன்) தன்னுடைய சிறந்த ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நாளை (16.07.2026) இரண்டாவது ஒருநாள் ஆட்டம் கார்டிஃப் மைதானத்தில் நடைபெறுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari