Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.!

ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.!

Upendra Singh Rawat: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உபேந்திரா சிங் ராவத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெண்ணொருவருடன் உபேந்திரா சிங் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் வாபஸ் முடிவை உபேந்திரா எடுத்துள்ளார்.

தற்போது உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள உபேந்திராவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இப்படியான சூழலில் தான், உபேந்திரா வெளிநாட்டு வம்சாவளி பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ போலியானது என தெரிவித்துள்ள உபேந்திரா இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

– சனாதன பேச்சு…! அமைச்சர் உதயநிதி மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

இதனை தொடர்ந்து உபேந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட என்னுடைய எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது, இது குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு மாண்புமிகு தேசியத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை பொது வாழ்வில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu