Dailyhunt
எச்சரிக்கை.! திமுக காணாமல் போகுமா.? பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடும் கண்டனம்.!

எச்சரிக்கை.! திமுக காணாமல் போகுமா.? பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடும் கண்டனம்.!

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழா, மதுரையில் சிறுகுறு தொழில்முனைவோர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் என்ன பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று தூத்துக்குடி வந்திருந்தார். அங்கு 17,300 கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

ReadMore – அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!

இதனை அடுத்து நேற்று அவர் திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், திமுக – காங்கிரஸ் கட்சி பற்றி கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்திற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும், 2024க்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், அப்போது திமுக என்ற கட்சி காணாமல் போகும் என்றும் பிரதமர் மோடி கூறினார். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என்று கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமரின் இந்த விமர்சனத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில், பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று இரண்டு முறை முதலமைச்சர் பதவி இழந்துள்ளார். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அப்படிப்பட்ட ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக பிரதமர் மோடி பேசி இருப்பதை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். ஜெயலலிதாவை வைத்து ஓட்டு வாங்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்.

READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

திமுக உருவான 1949 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 74 ஆண்டு காலமாக திமுக அழிந்து போகும் இனி தலை தூக்காது என்று பலர் பேசி கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், திமுக என்ற இமயமலை இன்னும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டு இருக்கிறது. திமுகவே இல்லாமல் ஆக்கி விடுவாராம் சவால் விட்டு உள்ளார். இப்படி சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைத்துவிட தான் போகிறார் என எச்சரிக்கிறேன்.

Read More –தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.!

தமிழகத்திற்கு தரவேண்டிய பேரிடர் நிவாரண நிதியை கூட தராமல் அல்வா கொடுத்து வருகிறார் பிரதமர் மோடி. இந்த தேர்தலில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் பிரதமருக்கு அல்வா கொடுப்பார்கள் என்று தனது அறிக்கையில் விமர்சித்து உள்ளார் திமுக எம்.பி நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு.

The post எச்சரிக்கை.! திமுக காணாமல் போகுமா.? பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடும் கண்டனம்.! first appeared on Dinasuvadu.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu