Dailyhunt
இளைஞர்களை கொண்டாட வைத்த 'பிரேமலு'! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?

இளைஞர்களை கொண்டாட வைத்த 'பிரேமலு'! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?

லையாள சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் வெளியாகிவிட்டது என்றாலே அதனை எல்லா மொழிகளிலும் கொண்டாடுவது உண்டு.

குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பலரும் மலையாள படங்களை விரும்பி பார்ப்பது உண்டு. அந்த வகையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘பிரேமலு’ படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் ஆகியோருடன் நஸ்லென் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படம் கடந்த 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்!

படம் நன்றாக இருப்பதன் காரணமாக படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் நஸ்லென் – மமிதா பைஜூ ஆகியோருடைய ரீல்ஸ் தான் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக படம் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், படத்தை ஓடிடியில் பார்க்கவும் ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்துள்ளனர். அவர்களுக்காகவே தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த பிரேமலு திரைப்படம் வரும் மார்ச் மாதம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu