Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!

இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!

PM Modi : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஏற்கனவே தமிழகத்திற்கு 4 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். சென்,னை கோவை , திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

முகத்தில் வழிந்த ரத்தம்.. பதறிய தலைவர்கள்.. பத்திரமாக வீடு திரும்பிய மம்தா.!

இதனை தொடர்ந்து தற்போது 5வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளார் . இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வர உள்ளார். அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர்.

- மம்தா பானர்ஜி படுகாயம்..! நெற்றியில் கடுமையான ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி

அதன் பிறகு சாலை மார்க்கமாக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்திற்கு பிரதமர் மோடி வர உள்ளார். அங்கு இன்று பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி சுமார் ஒரு மணி நேரம் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

- தேர்தல் பத்திரங்கள்! விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்… கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனங்கள்

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்று அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கே இருந்து டெல்லி புறப்படுகிறார் பிரதமர் மோடி.

இதனை அடுத்து வரும் 18ஆம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியிலும், 19ஆம் தேதி சேலத்திலும், 22ஆம் தேதி மதுரையிலும் நடைபெறும் பாஜக பொது கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu