Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?

முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?

Tamil Cinema தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காலகட்டத்தில் படங்களை தயாரிக்கும் பட்ஜெட்டில் பாதி பணம் நடிகர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்று கூறப்பட்டு வருகிறது.

அதிலும் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் என்பது ஒவ்வொரு படத்திற்கு அதிகரித்து கொண்டே செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னணி நடிகர்களுக்கு சம்பளத்தை குறைத்து கொடுக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

READ MORE - கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் எமோஷனல்!

சமீபத்தில் சென்னையில் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு நடிகர்கள் சம்பள குறைப்பு பற்றியும், திரையரங்குகளில் வெளியான படங்கள் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடிக்கு கொண்டு வருவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

read more - ராயன் முதல் சியான் 62 வரை….எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் லைன் அப்!!

இந்த ஆலோசனை கூட்டத்தில் தான் , முன்னணி நடிகர்களுக்கு சம்பளத்தை குறைத்து கொடுக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம். அதைப்போல, திரையரங்குகளில் படம் வெளியான பிறகு படங்கள் ஓடிடியில் வெளியாவது வழக்கமானது. ஆனால், சில ஓடிடியில் படங்கள் விரைவாகவே ஓடிடி தளங்களில் வெளியாகிவிடும். எனவே, 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடிக்கு படத்தை வெளியிட என்ன செய்யவேண்டும் என்பதற்கான முடிவும் பேசி எடுக்கப்பட்டுள்ளதாம்.

read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை!

இது தொடர்பாகவும், தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தமிழக அரசை விரைவில் சந்தித்து கூறவும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம். அதைப்போல, சிறிய படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறதாம். அதைப்போல, ரசிகர்களை திரையரங்கிற்கு எப்படி அழைத்து வரவேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? first appeared on Dinasuvadu.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu