OPS - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் உதவியுள்ளது.
கடந்த 2001 – 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் , உறவினர் என ஓபிஎஸ் தொடர்புடையவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
– சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வழக்கு விசாரணை சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரித்து வந்த போது, கடந்த 2012ஆம் ஆண்டு ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை கடந்த 2023ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
- போராட்டத்தில் விவசாயி எப்படி இறந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!
இதனை எதிர்த்து, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்தின் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ்க்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
The post ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை - உச்சநீதிமன்றம் first appeared on Dinasuvadu.

