Ponmudi: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவ்வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்காக நீதிபதிகள் முன்னிலையில் வந்தது.
– பிரதமர் விழாவில் முதல்வர் கலந்து கொள்ளமாட்டார்.! காரணம் இதுதான்.. திமுக விளக்கம்.!
அப்போது, தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். தொடர்ந்து, வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
The post தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு..! உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு first appeared on Dinasuvadu.

