அங்கு நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை சென்ற பிரதமர், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை அங்கிருந்து விமான நிலையத்திற்கு கார் மூலம் சென்றபின் அங்கிருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார்.
Read More – பிரதமர் மோடி வருகை… விண்ணில் ஏவப்படும் சிறிய ராக்கெட்.! இன்றைய பயண திட்டங்கள்….
இந்த நிலையில், இன்னு சற்று நேரத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. இதன்பின், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
Read More – பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆக இருக்கலாம்..! அமைச்சர் உதயநிதி.
இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நெல்லை மாவட்டத்துக்கு சென்ற சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று மாலை மீண்டும் டெல்லி புறப்படுகிறார். இதனிடையே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
The post தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி! first appeared on Dinasuvadu.

