Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பளம் உயர்வு.. -அமைச்சர் விக்னேஷ் அதிரடி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பளம் உயர்வு.. -அமைச்சர் விக்னேஷ் அதிரடி

Fnewsnow 2 weeks ago

டா ஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டா ஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.

இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதலாக செலவு ஆகும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டா ஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்டகாலமாக முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறி வருகிறார். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு எம்.ஆர்.பி க்கு மேல் கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் புகார்களை அடுக்கி வந்தனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறிவந்த நிலையில், இன்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று மதுவிலக்கத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:-

தமிழக முதல்வர் விஜய் கூறியதன் பேரில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் இ.எஸ்.ஐ கோரிக்கையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி மதுபானங்கள் எம்.ஆர்பி விலையில் ஊழியர்கள் விற்க வேண்டும். டா ஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஊதியம் ரூ.22,313 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயராது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வரும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் அரசுக்கு 110.74 கோடி கூடுதலாக செலவு ஆகும். டாஸ்மாக் பார் உரிமம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உதவி விற்பனையாளருக்கு ரூ.14,030 -ல் இருந்து 17,925 ஆக ஊதியம் உயர்த்தப்படும். விற்பனையாளர்களுக்கு ரூ.15,530-ல் இருந்து 19,413 ஆக ஊதியம் உயர்த்தப்படும். சூப்பர்வைசர்களுக்கு ரூ. 17,850-ல் இருந்து 22,313 ஆக ஊதியம் உயர்த்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow