Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூடுகிறது: பிரேமலதா கருத்து

எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூடுகிறது: பிரேமலதா கருத்து

Fnewsnow 14 hrs ago

“காவல் துறையை முதல்வர் கையில் வைத்திருந்தும் கொலை, கொள்ளை, பா*லியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. முதல்வர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பற்றி எங்களிடம் கேட்கக் கூடாது.

40 ஆண்டாக எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூட போகிறது” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது: “மின் கட்டண உயர்வு, மின்சார தடை குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்ப்பை தெரிவிக்க முடியும். அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முழுவதும் மின்வெட்டு மின்கட்டண உயர்வு ஒருபுறம், மறுபுறம் ஒரு யூனிட் வெளியில் இருந்து ரூ.30-க்கு வாங்கினால் நிச்சயம் மக்களை பாதிக்கும்.

போதைப் பொருள் கடத்தலில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பற்றி அக்கட்சி தான் பதிலளிக்க வேண்டும். எங்களை பொறுத்த அளவில் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். கேப்டனின் கனவும் அதுதான்.

பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்தபோது, காவிரி விவகாரம் குறித்து பேசவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

அதிமுக எம்எல்ஏக்களை தவெக குதிரை பேரம் பேசி வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. முற்பகல் செய்தது, பிற்பகலில் விளையும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என விஜயகாந்த் சொல்வார்.
வாழ்க்கை ஒரு வட்டம். நிச்சயமாக நாம் விதை விதைத்தால் விதை அறுப்போம், வினை விதைத்தால் வினைதான் அறுப்போம். குதிரை பேரம் பற்றி சட்டப் பேரவையில் முதலில் பேசியது நான் தான்.

ஜெம் வீரமணி விவகாரத்தை நினைக்கும்போது, தமிழகத்தில் இப்படியொரு நிகழ்வா என பெரிய அதிர்ச்சியாக உள்ளது. யார் தவறு செய்தாலும் தண்டிக்க வேண்டும்.

விலைவாசி உயர்வை அரசு தடுக்க வேண்டும். முதல்வர் காவல் துறையை கையில் வைத்திருந்தும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பட்டப்பகலில் படுகொ*லை, பா*லியல் வன்கொ*டுமைகள் நடக்கின்றன.
ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் ஜெயிப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

முதல்வர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பற்றி எங்களிடம் கேட்கக் கூடாது. 40 ஆண்டாக எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூட போகிறது.

மதுரையில்தான் மாநாடு நடத்தி உலக சரித்திரம் படைத்தார் விஜயகாந்த். மக்கள் கூட்டத்தைப் பற்றி தேமுதிகவிடம் கேட்காதீர்கள், எங்களுக்கு பழக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow