Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்றைய ராசி பலன்கள் - 19.05.2026 செவ்வாய் கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 19.05.2026 செவ்வாய் கிழமை

Fnewsnow 6 days ago

மேஷம் குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உங்கள் உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்
மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாய் வழி உறவினர்கள் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.

கடகம்
தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி
எதிர்பார்த்தவை சில தள்ளிப்போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். சொத்து வாங்குவது விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.

தனுசு
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். லேசாக தலைவலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் கவனமாக பழகுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.

மீனம்
இன்றைய நாள் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow