Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்றைய ராசி பலன்கள் - 23.05.2026 சனி கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 23.05.2026 சனி கிழமை

Fnewsnow 2 days ago

மேஷம்

ன்று உற்சாகமாக காணப்படுவீர்கள்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

ரிஷபம்

முன் கோபத்தை தவிற்க்கவும். முக்கிய காரியங்களில் காலதாமதம் ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுனம்

மன அமைதி கிடைக்கும் . பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.

கடகம்

குடும்ப ஆதரவு பெருகும். கணவன் மனைவி உறவு பலப்படும்.உணர்ச்சி வசப்பட்டு யாரிடத்திலும் பேச வேண்டாம். பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும். காரிய அனுகூலங்கள் உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

சிம்மம்

அடுத்தவர்களை குறை சொல்வது தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. விஐபிகளின் அறிமுகம் உற்சாகம் தரும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி

குடும்ப பாரம் அதிகரிக்க தொடங்கும்.பண தட்டுப்பாடு உண்டாகும் தேவையின்றி கடன் வாங்காதீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம்

குடும்ப சிக்கல்கள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.திருமண பேச்சு வார்த்தை தொடங்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.

புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் நல்ல அனுசரணை கிடைக்கும். விட்டுக்கொடுத்தல் போக்கு இருக்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.திடீர் பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

தனுசு

புதிய வாகன யோகம் அமையும் சொந்தவீடு கனவு நிறைவேறும்.தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பழைய பிரச்சனையில் ஒன்று தீரும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்

மதியம் 01:50 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம்.

மகரம்

குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். நல்ல செய்தி ஒன்று காதில் விழும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். பண வரவுகள் நன்றாக இருக்கும் உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. மதியம் 01:50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

கும்பம்

பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் விரைவில் முடியும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். நண்பர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும் வியாபார விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளுவீர்கள்.

மீனம்

முன் கோபத்தை தவிற்க்கவும்.முக்கிய பணிகளில் ஒன்று முடிவடையும். பொருளாதார பிரச்சனைகள் வரும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow