Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாப்பிள்ளை மேல கஞ்சா கேஸ்.. அழுது புலம்பிய நடிகை பிரேமப்ரியா!

மாப்பிள்ளை மேல கஞ்சா கேஸ்.. அழுது புலம்பிய நடிகை பிரேமப்ரியா!

Fnewsnow 18 hrs ago

'தொட்டி ஜெயா' படத்தில் வில்லியாக அறிமுகமாகி, லொள்ளு சபா முதல் சமீபத்திய 'கட்டா குஸ்தி 2' வரை பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் பிரேமப்ரியா.

கொரோனா காலத்தில் கணவன், தந்தை, அக்கா என மொத்த குடும்பத்தையும் இழந்து, தன்னந்தனியாக தன் மகளை பார்த்து பார்த்து வளர்த்த இவர், தற்போது விழுப்புரத்தில் தன் மகள் குடும்பத்தினரால் அடித்து துரத்தப்பட்டு, கண்ணீர் மல்கக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாப்பிள்ளை மேல கஞ்சா கேஸ் : என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்ச 3 நாள் கழிச்சு, மாப்பிள்ளை கஞ்சா கேஸ்ல கைதான வீடியோ எனக்கு வந்துச்சு. அதிர்ச்சியாகி என் பொண்ணுகிட்ட 'இந்தக் கல்யாணம் வேண்டாம்'னு சொன்னேன். ஆனா அவ கேட்காம பிடிவாதமா இருந்ததால கோபத்துல அடிச்சிட்டேன். ஒரு அம்மாவா கஷ்டப்பட்டு வளர்த்த எனக்குத்தான் அந்த வேதனை தெரியும். ஆனா என் பொண்ணு அந்த ஆளோட வீட்டை விட்டு ஓடிட்டா. அப்புறம் அவ வாழ்க்கை நல்லா இருக்கணுமேனு ரிஜிஸ்டர் மேரேஜ்ல போயி நான் கையெழுத்தும் போட்டேன். ஆனா அதுக்கப்புறம் என் பொண்ணை என்னோட பேசவே விடல.

என் நம்பரை பிளாக் பண்ணிட்டாங்க. சரி, என் பொண்ணை பாப்போம்னு அவங்க வீட்டுக்குப்போனா, என்னை பார்க்கவே விடாம பூட்டி வச்சுட்டாங்க. 'திருட்டுத்தனமா ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டு எதுக்கு என் பொண்ணை பிரிக்கிறீங்க?னு கேட்டதுக்கு, மாப்பிள்ளையோட அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரும் சேந்து என்னைத் தகாத வார்த்தையில பேசி அடிச்சு துரத்திட்டாங்க. சினிமா துறையில கூட யார் கண்ணுலயும் படாத அளவுக்கு மூடி மூடிப் பாதுகாத்து பி.சி.ஏ (BCA) வரை படிக்க வச்சேன். என் பொண்ணை நல்லா பிரைன் வாஷ் பண்ணி வச்சிருக்காங்க! மாப்பிள்ளை குடும்பத்துல யாரும் என்கிட்ட பேச வேண்டாம்.. ஆனா என் பொண்ணு என்கிட்ட பழையபடி பேசணும், அதுக்காகத்தான் போலீஸ்ல புகார் கொடுத்திருக்கேன். கணவன், குடும்பத்தை இழந்து மகளுக்காக மட்டுமே வாழ்ந்த துணை நடிகை பிரேமப்ரியா, மாப்பிள்ளை வீட்டார் மீது கொடுத்த இந்த அதிரடி புகார் சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow