Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'மிஷன் ரூமி ட்வின் - 2026' ராக்கெட் ஏவுதல் நிகழ்வு - மார்டின் குழுமம்

'மிஷன் ரூமி ட்வின் - 2026' ராக்கெட் ஏவுதல் நிகழ்வு - மார்டின் குழுமம்

Fnewsnow 1 week ago

சென்னை - மகாபலிபுரம் அருகே உள்ள தேவனேரி பகுதியில், ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம், மார்டின் குழுமம் மற்றும் அமெரிக்காவின் குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய 'மிஷன் ரூமி ட்வின் - 2026' ராக்கெட் ஏவுதல் நிகழ்வில் கலந்து கொண்டு, எனது மனைவி திருமதி சிந்து ஸ்ரீ சார்லஸ் அவர்களுடன் இணைந்து குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தேன்.

இந்நிகழ்வில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆ. நமச்சிவாயம், ‘இந்தியாவின் மூன் மேன்’ பத்மஸ்ரீ டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனர் டாக்டர் திரு. ஆனந்த் மேகலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசியத் தலைவர் திரு. செந்தில் தொண்டமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் தலைமைச் செயல் அதிகாரி திருமதி நீமு மூர்த்தி, எனது தாயாரும் மார்டின் குழும இயக்குநருமான திருமதி லீமா ரோஸ் மார்டின் MLA, அரைஸ் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி டெய்ஸி ஆதவ் அர்ஜுனா, டாக்டர் கிரேக் கிளிண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரிச்சர்ட் ஜான்குமார், லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு. ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஏராளமான பள்ளி மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow