Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒளிர வேண்டும் - பெண் கவிதை

ஒளிர வேண்டும் - பெண் கவிதை

Fnewsnow 4 days ago

ஒளிர வேண்டும் என்று முடிவெடுத்தால் அது
அந்தியின் வெளிச்சம் போல்
இருக்க வேண்டும்
ஜன்னல் வழியே
நுழையும் காற்றில்

திரை மெதுவாக
அசைவதுபோல்
மனதை அசைப்பது
சூடான சாதத்தில்
வெண்ணெய் உருகும்
அமைதியுடன் உள்ளத்தை
மென்மையாக்குவது
பழைய ரேடியோவில்
என்றோ கேட்டிருந்த
பழக்கமான பாடல் போல
ஒருவர் நினைவில் கரைவது
பிடித்து வைத்திருப்பதாய்
உறவுகள் சொல்லும் அதன்
இறுக்கத்தை மெல்ல அவிழ்த்து
பிடிப்புகளை நெகிழச்செய்வது
எதுவும் இங்கே
மறைவது இல்லை
கைகளை உதறாது
மெதுவாக இடம் மாறுகிறதென
உணர்வு பூர்மாய் தெளிவது
அன்பு என்பது
ஒருவரின் உள்ளத்தில்
நீயற்றும் தங்கும் ஒரு
ஞாபகத்தின் வாசனையென
அறிந்து கரையேறுவது.....
உமா மஹேஸ்வரி பால்ராஜ்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow