Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சீமான் எடுத்த அதிரடி முடிவு.. டார்கெட் 2029 நாடாளுமன்ற தேர்தல்?

சீமான் எடுத்த அதிரடி முடிவு.. டார்கெட் 2029 நாடாளுமன்ற தேர்தல்?

Fnewsnow 5 days ago

ட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. அதிமுக மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பெருமளவுக்கு சரிந்துள்ளது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று சீமான் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "திமுகவுக்கு இப்போது காங்கிரஸின் துரோகம் தெரிந்திருக்கும். பதவிக்காக அவருடன் நின்ற கட்சி தான் திமுக. திமுகவை கேவலப்படுத்திவிட்டு சென்றார். ஸ்டாலினுடன் மேடை ஏறாத ராகுல் காந்தி, விஜய் பதவியேற்பு விழாவில் பல்லை காட்டி கொண்டிருக்கிறார். பதவி ஏற்கும்போது தீயசக்தி எல்லாம் தூய சக்தியாக மாறிவிட்டார்களா.

திமுகவுக்கு இந்த தோல்வி நிகழ்ந்ததில் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. இன்னும் என்ன செய்வது என்று திமுக யோசிப்பதற்குள் 5 வருடங்கள் ஓடிவிடும். மக்களுக்கு கருத்துகளை விட கவர்ச்சி தான் தேவைப்படுகிறது. எதுக்கு வாக்களித்தோம் என்று தெரியாமல் வாக்களித்துள்ளனர். வெற்றி பெற்ற பிறகு தான் அவர் அங்கு போட்டியிட்டதே தெரியவந்துள்ளது.

ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கு என்று தெரியாமல் தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டாரா. நல்லவேளை என்னை தோற்கடித்துவிட்டனர். நான் வெற்றி பெற்று 5 பேர் உள்ளே போயிருந்தால் எல்லோரும் வெளியே தான் இருப்பார்கள். தவெக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 10 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும்.

விஜய் போரிட்டு ஈரானை கைப்பற்றினால் தான் 6 சிலிண்டர் வாங்க முடியும். இன்னும் சில நாட்களில் அரிசி உள்ளிட்டவற்றுக்கு கஷ்டம் வரும். அன்றைக்கு நான் போராட வரமாட்டேன். அப்போது சீமான் சிரித்து கொண்டிருக்க மாட்டேன். 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். 2026 தேர்தலில் இழந்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை பெறுவோம்.

நாங்கள் 5 சதவீதம் முதலாளிகளுக்கானவர் அல்ல, 95 சதவீதம் விழுக்காடு மக்களுக்கானவர்கள். பூனையை விட புலிகள் வலிமையானவை என்பது எலிகளுக்கு எப்போதும் தெரியாது. ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்திற்கு வந்தவர்கள் இல்லை நாங்கள். அரசியல் மாற்றத்திற்காக வந்த புரட்சியாளர்கள். விடியாத இரவொன்று கிடையாது. அடையாத இலக்கும் கிடைக்காது" என்றார்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow