Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சி விஜயபாஸ்கர் மீது மோசடி புகார்.. அதிமுக வேட்பாளர் ஐகோர்ட்டில் மனு

சி விஜயபாஸ்கர் மீது மோசடி புகார்.. அதிமுக வேட்பாளர் ஐகோர்ட்டில் மனு

Fnewsnow 1 week ago

ட்டசபை தேர்தலில் அதிமுகவில் போட்டியிட சீட் பெற்று தருவதாக கூறி ரூ.4 கோடி வாங்கி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் மோசடி செய்து விட்டார்.

அவரிடம் இருந்து பணத்தை வாங்கி தருவதோடு, அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஆலங்குடி சட்டசபை தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தன விமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் சி விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சி விஜயபாஸ்கர் விராலிமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011, 2016, 2021, 2026 என 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது தவெகவில் புதுக்கோட்டை அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சி விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.4 கோடி மோசடி தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தாக்கல் செய்தவர் பெயர் தன விமல். இவர் அதிமுகவை சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் முன்னாள் அமைச்சர் மெய்யநாதனிடம் தோற்றுப்போனார்.

தற்போது தன விமல் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ''அதிமுகவில் சி விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்தார். ஆலங்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் வாங்கி தருவதாக கூறினார். தேர்தல் செலவுகள் மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்கும் பொருட்டு ரூ.5 கோடி தர வேண்டும். இந்த தொகையை வேட்பாளர் பட்டியல் வெளியானதும் திரும்ப தந்துவிடுவேன் என்று கூறினார். நான் ரூ.4.50 கோடி வழங்கினேன்.

இந்த பணம் ஒப்பந்ததாரரான சோத்துப்பாளையம் முருகேசன் வழியாக வழங்கப்பட்டது. ஆனால் போட்டியிட வாய்ப்பு கிடைத்த பிறகு பணத்தை திரும்ப கேட்டேன். அவர் ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுத்தார். ரூ.4 கோடியை தரவில்லை. தற்போது தவெக சென்றதால் பணம் கேட்கும்போது மிரட்டுகிறார்.

இதுதொடர்பாக புதுக்கோட்டை எஸ்பியிடம் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சி விஜயபாஸ்கரிடம் இருந்து என்னுடைய ரூ.4 கோடியை திரும்ப பெற்று வழங்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இது விஜயபாஸ்கருக்கு சிக்கலாக மாறி உள்ளது.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow